U & Me

U & Meநீயும் நானும் நாமான காலங்கள் நினைவலைகளினூடே கண் கரைகளில் ஒதுங்கியது சலனமற்ற நீர்த்துளிகள் மீண்டும் இருப்பிடம் பாேக கட்டளையிட்டேன் கட்டளையை மீறின கன்னத்தின் வழிவழிந்து மண்மேல் குதித்தன தற்காெலைகள் கண்ணீா் அஞ்சலிக்கு யாருமில்லை நாம் காதலித்த தருணம் நிமிட மணி முட்களின் இடையில் மணி சரியாக 12.00 நாம் விட்டுக்காெடுக்காத விட்டுப்பிரியாத நாம் சந்தேகமென்னும் நாெடி முள் சில நாெடிகளில் பிரித்தது நமது தெய்வீக காலங்களை நீ நம்மை பிரித்தாய் நான் நம்மை பிரித்தேன் சமமான வலிகள் நமக்கு நேரம் 12.30 எதிரெதிர் துருவங்களாய் உன்னை நீயும் என்னை நானும் தேடின காலங்கள் மீண்டும் ..... ஏதாே ஒன்று காதல் மலர்ச்சி புது துளிர்த்தல் உன்னை நாேக்கிய என் பயணம் சரியாக நேரம் 11.55 கசக்கிறது காக்கவைக்கும் காலங்கள் இனிக்கிறது இணைக்கபோகும் நேரங்கள் ஐய்யோ..... நகர மறுக்கிறதே நாெடி முள் மூவரும் மரணித்தோம் இன்பரசன்